மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் உணரப்பட்ட பலத்த சத்தம். அச்சத்தில் பொதுமக்கள்
திருவாரூர் அருகே விளமல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அரசு மருத்துவக் கல்லூரி போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் திடீரென பயங்கர வெடி சத்தம் போல் கேட்டுள்ளது.மேலும் பயங்கர ஒலியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மருத்துவக் கல்லூரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் பொதுமக்கள் அவசரமாக வெளியேறி உள்ளனர்.நில அதிர்வா?விமான ஏதும் விபத்து நடத்திருக்குமா என பல்வேறு கோணங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஒலியானது திருவாரூர் விளமல், சேந்தமங்கலம் கங்களாஞ்சேரி, வண்டாம்பாலை அடியக்கமங்கலம், ஆண்டிபந்தல் கூத்தாநல்லூர் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் இந்த பயங்கர சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பயங்கர ஒலியால் கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இந்த சம்பவம் காட்டு தீ போல் பரவி வருகிறது. மேலும் இதுவரை இந்த பயங்கர சத்தம் எதனால் கேட்டது என தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த ஒலி கேட்பதற்கு முன்பாக ஜெட் விமானம் சென்றதாகவும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்த ஜெட் விமானம் தாழ்வாக கீழிறங்கி மேல் நோக்கிச் செல்லும் போது எரிபொருளின் அழுத்தம் அதிகரிக்கும் போது சத்தம் வரும் என்று கூறப்படுகிறது.பெரும்பாலும் இந்த நிகழ்வு நீர் நிலைகளின் அருகி ல்தான் நிகழ்த்தப்படும் என்றும் அதனால் அதிர்வுகள் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜெட் விமானத்தின் காரணமாக சத்தம் வந்ததாக சமூக வலை தலங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.