குடியிருப்பு பகுதியில் புகுந்த 6 அடி நீள பாம்பால் மக்கள் பீதி…
புதுச்சேரி…குளிர்ந்த காற்றுடன் மழை. குடியிருப்பு பகுதியில் புகுந்த 6 அடி நீள பாம்பால் மக்கள் பீதி…
புதுச்சேரியில் கோடை வெயில் தகித்து வந்தது. வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த ஒருவாரமாக நள்ளிரவில் லேசான மழை பெய்தது.
தற்போது குறைந்த காற்றழுத்தம் காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டாலும் புதுச்சேரியில் காலை முதல் இரவு 8 மணிவரை வெயில் தாக்கம் இருந்தது.
இரவு 8 மணிக்கு பிறகு கருமேகங்கள் திரண்டு லாஸ்பேட்டை, காலாப்பட்டு, பத்துகண்ணு, மூலக்குளம் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. மற்ற இடங்களில் பலத்த காற்று வீசியது.
அவ்வாறு நகரின் ரெயின்போ நகர் பகுதியில் பல காற்று வீசிய போது 7 வது குறுக்கு தெருவில் பெரிய பாம்பு ஒன்று வழிமாறி ஒதுங்க இடம் தேடி தடுமாறியது.
உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வருவதற்குள் ஆறு அடி நீளமுள்ள நல்ல பாம்பு குப்பையும் மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் சென்று மறைந்தது. வனத்துறையினர் அரைமணி நேரமாக தேடியும் தென்படவில்லை.
அடுத்து பாம்பை கண்டால் தெரிவிக்க கூறி அவர்கள் சென்றாலும் பாம்பு பீதியில் ரெயின்போ நகர் இரவை கடக்க வேண்டியுள்ளது.