பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சு
பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், பெண்கள் கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில் ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் கவலைப்பட வேண்டிய நேரமாக உள்ளது, மாணவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் பெற்றவர்கள் அறிவுரை கூறி உறுதுணையாக இருக்க வேண்டும் அரசு மாவட்ட மாதிரி பள்ளி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சு.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டையில் மாவட்ட மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மானவர் அறிமுக சேர்க்கை நடைபெற்றது.
இதையொட்டி முதன்மை கல்வி அதிகாரி அம்பிகாபதி ,தலைமை வகித்தார் விழாவில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசும்போது.
இந்த மாவட்ட மாதிரி பள்ளியில் சேர்ந்துள்ள. மாணவ , மாணவிகளுக்கு, கல்வியோடு, ஆங்கில பேச்சு திறன், Neet, JEE விளையாட்டு, போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மதிப்பென் குறைவு என திட்டாதீரகள் மற்றவர்களோடு ஒப்பிட்டு பேச கூடாது. எல்லா குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும் என்றும், பெண் பிறந்தால் கவலைப்பட வேண்டும் என்ற நிலைமை மாறி பெண் பிறந்தால் பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
மாணவிகள் தற்போது எல்லா துறையிலும் முன்னேறி வருகின்றனர். நாம் கூறக்கூடிய அறிவுரைகள் ஆண் குழந்தைகளுக்கு தான், மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
பின், 10th, 11th,ல் கடந்த ஆண்டு அதிக மதிப்பென் பெற்ற மானவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும். இந்த மாவட்ட மாதிரி பள்ளியில் இந்த ஆண்டுக்கான மானவ மாணவி சேர்க்கையும் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வில்லவன் கோதை நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.