in

என்னைப் பற்றி பேசி பேசி ஓய்ந்தவர்கள் தற்போது விஜய்யை பற்றி பேச தொடங்கியுள்ளனர் சீமான் பேட்டி


Watch – YouTube Click

ரூ 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர், தொழில்துறை அமைச்சர் கூறி வருவது பொய்: வழக்குத் தொடர்வோம் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்று. தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தபோது இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததா என்பதை பார்க்க வேண்டும். வலிமையான இந்திய கடற்படை பாதுகாப்பு பணியில் உள்ளது. சொந்த நாட்டு மீனவர்களை பாதுகாக்காமல் இந்திய கடற்படை என்ன செய்து வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறுகின்றனர் எல்லையை எதைக்கொண்டு அளவீடு செய்கின்றனர். எல்லையில் இந்திய கடற்படை கப்பலை நிறுத்தினால் இதுபோன்ற பிரச்சனைக்கு இடமில்லை. இந்திய மீனவர்கள் கைது செய்யும்போது ஒரு தடவையாவது நமது கடற்படையினர் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர் என்ற செய்தி வந்தது உண்டா. இந்திய கடற்படையால இலங்கை மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதேசமயம் இலங்கை கடற்பறையினால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும், பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதும் வழக்கமாக உள்ளது.

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைகளுக்கு பயிற்சி போன்றவைகளை இந்தியா வழங்கி வருவது ஏற்புடையதல்ல.

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அவர்கள் வாக்குகளை மட்டும் வேண்டும் என்கின்றனர்.

பிரதமர் மோடி பார்க்காத நாடுகளை பார்ப்பதற்காக, உக்ரைன் சென்றுள்ளார்.

தமிழக முதல்வர் அமெரிக்க பயணம் முதலீட்டாளர்களை சந்திப்பதற்கு என்பது கூறப்படுகிறது. தமிழக முதல்வரும், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறுவது முற்றிலும் பொய். இது தொடர்பாக நான் வழக்கு தொடுப்பேன்.

தொழில்கள் செய்வதற்கு ஏதுவான இடங்களை தேடி முதலீட்டாளர்கள் தாமாகவே செல்வர். ஆனால் பிரதமர் மோடியும், தமிழக முதல்வரும் தேடிச் சென்று கூவி கூவி அழைக்கின்றனர். பிரதமர் மோடி சர்வதேச தரகரும் முதல்வர் அகில இந்திய தரகராக விளங்குகின்றனர்.

விஜய் அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவரது கொடி தொடர்பான விமர்சனங்கள் கொடியைப் பற்றி அல்ல. அது அவர் வருவதைப் பற்றி. அவரது கொடியில் இடம் பெற்றிருக்கும் யானை வண்ணங்கள் அனைவருக்கும் பொதுவானது. என்னைப் பற்றி பேசி பேசி ஓய்ந்தவர்கள் தற்போது புதிதாக வந்துள்ள விஜய்யை பற்றி பேச தொடங்கியுள்ளனர்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கேள்விக்கு – என்னிடம் பல முறை கேட்டு விட்டீர்கள். விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்வி என்றார்.


Watch – YouTube Click

What do you think?

அவரை வளர்ப்பதற்கே அரசியல் செய்கிறார் அண்ணாமலை, ஆர் பி உதயகுமார் விமர்சனம்

திடிரென்று நடிகர் எட் வெஸ்ட்விக்..கை திருமணம் செய்து கொண்ட நடிகை எமி ஜாக்சன்