சாதனை, வேதனைகளை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் வாக்களிப்பர்” – அமைச்சர் மஸ்தான்.
முதல்வரின் சாதனைகளையும், பிரதமரால் ஏற்பட்ட வேதனையையும் சீர்தூக்கி பார்த்து மக்கள் வாக்களிப்பர் என அமைச்சர் மஸ்தான் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மதியம் 1.00 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செஞ்சி புனித மிக்க மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன் குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “முதல்வரின் சாதனைகளையும் பிரதமர் மோடியின் பத்தாண்டு கால வேதனைகளையும் மக்கள் ஒருங்கிணைத்து பார்த்து இந்தியா கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை அளித்து வருகின்றனர்” என அமைச்சர் கூறினார். அவர் பேசியதாவது.