in

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான பராமரிப்பு உதவி தொகை கேட்டு புதிதாக மனு அளித்தவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை என்றும் இதனால் தமிழக முழுவதும் 80 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதனை சரி செய்து மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய பராமரிப்பு உதவி தொகை வழங்க கோரியும் , மாற்றுத்திறனாளிகளுக்கு 35 கிலோ அரிசி வழங்கக்கூடிய அன்தோதிய அண்ணா யோஜனா திட்டத்தில் குடும்ப அட்டையை மாற்றம் செய்ய மனு அளித்தவர்களுக்கு ஏ ஏ ஐ அட்டை வழங்கக்கோரியும், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே அமைச்சர் மூர்த்தி உள்ள நிலையில், ஆட்சியர் அலுவலக வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டது. பொதுமக்களும் அரசு அலுவலர்களும் உள்ளே வர முடியாமலும் வெளியே செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

What do you think?

1 கோடியில் கட்டப்படும் குரம்பு வேலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.

மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் – பணிகள் பாதிப்பு.