தென்காசி மக்களவைத் தொகுதியில் காலை முதல் வாக்குப்பதிவு தொடக்கம் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நாளை நடைபெறுகிறது. அந்த வகையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் தென்காசி மாவட்டத்திலிருந்து 4 சட்டமன்ற தொகுதிகளும் விருதுநகர் மாவட்டத்திலிருந்து 2 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடங்கியது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை
மொத்தமாக 15, 25,439 வாக்காளர்களும், இதில் ஆண் வாக்காளர்கள் 7,46,715 , பெண் வாக்காளர்கள் 7,78,509 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 215 உள்ளனர்.
இதில் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மொத்தமாக 1,743 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பதட்டமானவையாக 106 , மிகவும் பதட்டமானவை 14 என மொத்தம் 120 வாக்குச் சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவது மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்களை கண்காணிக்கும் வகையில் 2 நிரந்தர சோதனை சாவடிகள், 7 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை நேர்மையான முறையிலும் பாதுகாப்பான முறையில் நடத்தும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 1400 காவலர்கள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 277 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குற்றாலம், குத்துக்கல்வலசை உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு இந்திர கோளறு காரணமாக வாக்குப்பதிவில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.