மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன், எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்,வேட்பு மனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பேட்டி
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்காக கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் இருந்து தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுக்க ஊர்வலமாக புறப்பட்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் கோரி மேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலை வந்தடைந்தார்.
அங்கு சிறப்பு பூஜை செய்த முதலமைச்சர் ரங்கசாமி அப்பா பைத்தியசாமியிடம் வேட்புமனுவை வைத்து பூஜை செய்து அமைச்சரிடம் வழங்கினர்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் கதிர்காமம் கதிர்வேல் சாமி கோவிலை வந்து அடைந்தது அங்கே வேட்பு மனுவை வைத்து முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்தார்.
இதைத் தொடர்ந்து ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றது அங்கு தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் தடுத்தவுடன் ஐந்து பேரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே அனுமதித்தினர்.
அதில் முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக தலைவர் செல்வ கணபதி ஆகியோர் உள்ளே சென்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கனிடம் பாஜக வேட்பாளர் நமசிவகம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்…
பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான பாமக நிறுவனர் ராமதாஸ் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து புதுச்சேரியில் மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் அப்படி வெற்றி பெற்றால் மாநில வளர்ச்சிக்கு தேவையான அனைத்து மக்கள் வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றுவேன் என்று தெரிவித்த அவர் மத்திய மாநில அரசுகளுக்கு உறவு பலமாக இருந்து அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும் அமைச்சர் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டத்தில் இடமில்லை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இது போல் கூறுவது அவர்களுடைய தோல்வி பயத்தை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.