அவுட்டோர் யூனிட்..டை அனுப்ப மாட்டோம் என்று பெப்சி அறிக்கை வெளியிட்டுள்ளது
ஒளிப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாடகை கொடுக்கும் ஒரு அமைப்பு பெப்சி கிட்டத்தட்ட 40 வருடங்களாக தயாரிப்பாளர்களுடன் இணைந்து தொழில் புரிந்து வரும் நிலையில் ஆர்கே செல்வமணி சுவாமிநாதன் ஆகியோர் நிர்வாகிகளாக வந்த பிறகு வெளி மாநிலங்களில் இருந்து யூனிட் களை வரவழைத்து தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துகின்றனர்.
இதனால் எங்கள் தொழில் பாதிப்படைகிறது. தமிழர்கள் என்று கூறும் அவர்கள் தமிழர்களான எங்களுக்கு தொழில் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதை கட்டுப்படுத்த பல கூட்டங்கள் நடத்தியும் இன்று வரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை திரைத்துறையில் உள்ள அனைவரும் தங்கள் சொல் பேச்சு மட்டுமே கேட்டுநடக்கவேண்டும் என்று நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இதற்கெல்லாம் தீர்வு காண அவுட்டோர் யூனிட் அசோசியேசன் உபகரணங்களை இனி படப்பிடிப்புக்கு அனுப்புவதில்லை இன்று முதல் சினிமா தொலைக்காட்சி வெப் சீரியஸ் விளம்பர படங்கள் என்று எதிர்க்கும் எங்கள் அவுட்டோர் யுனிடத்திலிருந்து பொருட்களை அனுப்ப மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.