விடாமுயற்சி சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு
ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒரு வழியாக பூர்த்தி செய்ய நாளை உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது விடாமுயற்சி.
பரபரப்பான கதை, ஸ்டைலான காட்சியமைப்பு மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகும் விடாமுயற்சி படத்தின் FDFS..இக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே அளித்தது.
முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்பு காட்சியாக காலை 9 மணிக்கு அனுமதி வழங்கப்படும். விடாமுயற்சி படத்திர்க்காக ஒரு சில திரையரங்குகள் 9 மற்றும் 10 மணி காட்சிகளுக்கான டிக்கெட் வழங்கியுள்ளனர். தற்பொழுது அவர்கள் 11.30 மணிக்கு டிக்கெட்களை மாற்றிக்கொள்ள ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அஜித்தின் துணிவு படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியானது, சிறப்பு காட்சியின் போது வாலிபர் ஒருவர் சம்பவ இடத்தில் மரித்தார். எந்த அசம்பாவிதமும் நடந்து விடகூடாது என்று சிறப்பு காட்சிகளுக்கு இதுவரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
வெளிநாடுகளிலும் மற்ற மாநிலங்களிலும் அதிகாலையிலேயே விடாமுயற்சி படம் வெளியாகவுள்ள நிலையில் இறுதி நேரத்தில் ஏதாவது மாற்றம் நிகழாதா என்று ரசிகர்கள் 9:00 மணி காட்சிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.