in

33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்த அனுமதி


Watch – YouTube Click

33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்த அனுமதி

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி..யில் நடக்க அனுமதி வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் அண்மையில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியவர் விரைவில் மாநாடு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி யில் மாநாடு நடத்த அனுமதி கேட்ட போது போலீஸ் சூப்பிரண்டட் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு 21 கேள்விகள் கேட்டு பதில் அளிக்குமாறு நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆறாம் தேதி கட்சியின் பொதுச் செயலாளரிடம் ஆலோசனை நடத்திய போது எல்லா கேள்விகளுக்கும் உரிய பதில் அளித்த பிறகு துணை போலீஸ் சூப்பிரண்டட் சுரேஷ் மாநாடு நடத்த 33 நிபந்தனைகலுடன் அனுமதி வழங்கினார்.

விஜயின் கட்சிக்கு என்னென்ன நிபந்தனைகள் அளிக்கப்பட்டது என்பதை பார்போம். மாநாடு பிற்பகல் 2 மணிக்குள் தொடங்க வேண்டும் இரண்டு மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். மாநாட்டிற்கு வருபவர்களின் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்ட போது 250 வேன்கள் 250 கார்கள் மற்றும் 100 பஸ்கள் ஆயிரம் மோட்டார் சைக்கிள் என்று கட்சியின் சார்பாக கூறப்பட்டது.

அவற்றை கணக்கிட்ட போலீஸ் சூப்பிரண்டட் அம்பதாயிரம் பேர் மாநாட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதற்கான வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறதா, தேசிய நெடுஞ்சாலையில் மாநாட்டுக்கு செல்ல தடுப்பு அமைக்கப்பட்டிருக்கிறதா, மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும், நடிகர் விஜய் மாநாட்டிற்கு வருவதற்கு தனியாக வழியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மின் Wire…கள் செல்லும் வழியில் நாற்காலிகள் போடக்கூடாது விபத்துகளை தவிர்ப்பதற்கு சாலையில் கொடி கம்பங்கள் பேனர்கள் வைக்க கூடாது கண்காணிப்பு கேமராக்கள் என்று தனி அறை ஒதுக்கப்பட வேண்டும் இப்படி பல நிபந்தனைக்கு இடையில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


Watch – YouTube Click

What do you think?

வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடற்கரையில் கரைத்து வருகின்றனர்

வேதாரண்யத்தில் இருந்து தண்டிக்கு தனி ரயில் இயக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா. முத்தரசன் பேட்டி