வழக்கை ரத்து செய்ய… அல்லு அர்ஜுன் மனு
அல்லு அர்ஜுன் கடந்த தேர்தலின் போது ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் சமயத்தில் கிஷோர் ரெட்டி..யை காண சந்திக்க அவரது வீட்டுக்கு அல்லு அர்ஜுன் சென்றபோது ரசிகர்கள் அவரின் வீட்டிற்கு முன்பு கூடிவிட்டனர். தேர்தல் விதியை மீறி எம்.எல்.ஏ ரெட்டியின் இல்லத்தில் முன் அனுமதியின்றி பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக எம்.எல்.ஏ மீதும் அல்லு அர்ஜுன்.. வீதியில் கூட்டம் சேர்த்ததாக அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய ஆந்திரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அல்லு அர்ஜுன். எனக்கு பல வருடங்களாக கிஷோரை…தெரியும் நந்தியாலாவிற்கு சென்றது எனது நண்பர் தேர்தலில் நிற்கிறார் வாழ்த்து கூற அவரது வீட்டிற்கு நான் சென்றேன் இதனை அறிந்த ரசிகர்கள் கூட்டம் கூடி விட்டனர்.
ஆனால் அந்த கூட்டதால் எந்த அசம்பாவிதமும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை. நான் தேர்தல்..விதியை மீறியதாக சொல்லப்படுவது குற்றம் எனவே எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.