ஜப்தி உத்தரவை ரத்து செய்ய….பிரபு கோர்ட்டில் மனு தாக்கல்
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பிரபுவின் சகோதர் ராம்குமாரின் மகன். இவரும் இவரது மனைவி அபிராமியும் ஈசன் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்த ஜக ஜால கில்லாடி திரைப்படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ்..யிடம் 3 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தாததால் ஒன்பது கோடியே 39 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது .கடனை அடைக்காததால் தனபாக்கியம் என்ற என்டர்பிரைசஸ் கோட்டில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து ஏலத்தில் விட உத்தரவிட்டது தற்பொழுது அந்த நிலத்தை ஜப்தி செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று சென்னை ஹை கோர்ட்டில் பிரபு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
சிவாஜி கணேசன் உயிரோடு இருக்கும்பொழுது அந்த வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்துவிட்டார். இதற்கு எனது சகோதரரும் சகோதரிகளும் சம்மதம் தெரிவித்து பத்திரத்தில் கையெழுத்து போட்டனர்.
இப்பொழுது அவர்களுக்கு இந்த வீட்டின் மேல் எந்த உரிமையும் இல்லாதபோது கோர்ட் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.