in

ஆக்கிரமைப்பு கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த நடைமுறைப்படுத்திட கோரிக்கை மனு


Watch – YouTube Click

ஆக்கிரமைப்பு கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த நடைமுறைப்படுத்திட கோரிக்கை மனு

 

அரசு நிலத்தில் ஆக்கிரமைப்பு கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்திட கோரிக்கை மனு

கரூர்- திண்டுக்கல் பிரதான சாலை அமைந்துள்ள பாளையம் பேருந்து நிறுத்தத்தில் திருமுருகன் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி முன்பு அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நத்தம் சர்வே எண் 428A/10A, நீளமானது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு வருவாய்துறை மூலம் வழங்கப்பட்ட இடமாகும்.

இந்த இடத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாளையம் அருகே உள்ள காச்சக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்த, பாளையம் பேரூராட்சி, தேமுதிக 1வது வார்டு கவுன்சிலர் காளியப்பன் வயது 55 என்பவர் மூன்று மாடி கட்டிடம் ஒன்றைக் கட்டியது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பாளையம் பகுதியை சேர்ந்த, எம்.கே.செந்தில்குமார் தொடர்ந்து வழக்கில் அரசு ஆக்கிரமிப்பு நிலத்தில், கட்டப்பட்ட கட்டிடத்தை 12 வாரங்களுக்குள், அகற்றிவிட்டு, கடந்த 2013 அக்டோபர் 16ஆம் தேதி உத்தரவிட்டது.

பின்னர் பாளையம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு, கடந்த 2023 நவம்பர் 23 ஆம் தேதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டடத்தை ஆய்வு செய்து, உடனடியாக அகற்றுமாறு ஆணை பிறப்பித்தது, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.

இந்நிலையில், அந்த இடத்தில் புதிதாக வேலவன் பேக்கரி ஸ்வீட்ஸ் கடையை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் அலுவலகம் மூலம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எம்கே செந்தில்குமார் பதிவு தபால் மூலம் புகார் மனுவினை அனுப்பி வைத்தார்.

பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் அலுவலகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த எம்.கே.செந்தில்குமார், பாளையம் பேருந்து நிறுத்தம் முன்புள்ள திருமுருகன் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி முன்பாக கட்டப்பட்டுள்ள மூன்று மாடிகள் அடங்கிய கட்டிடத்தை அப்புறப்படுத்த, பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உரிமையாளருக்கு கடந்த 2024 ஜனவரி 29ஆம் தேதியிட்டு, நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் புதிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடத்தில் வேலவன் பேக்கரி அண்ட் ஸ்வீட் என்னும் கடையை துவக்க, கடந்த ஒரு வார காலமாக ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தும், வகையில் புதிதாக திறக்கப்பட உள்ள வேலவன் பேக்கரி அண்ட் ஸ்வீட் கடைக்கு தடை விதிக்க வேண்டும்,

நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் விரைந்து நீதிமன்ற உத்தரவினை அமுல்படுத்திட வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக வழக்கறிஞர் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் உள்ளோம் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

பாஜக ஆதரித்து காமெடி நடிகர் செந்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்

கணவனின் முகமூடி அணிந்து உழவர் சந்தை சிறு வியாபாரிகளிடம் ஓட்டு கேட்ட மனைவி