மேம்பாலம் அமைய கையகப்படுத்திய வீடுகள் மற்றும் இடங்களுக்கு இழப்பீடு தராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சிங்களாஞ்சேரி பகுதியில் 8 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் அமைய கையகப்படுத்திய வீடுகள் மற்றும் இடங்களுக்கு இழப்பீடு தராமல் ஏமாற்றியதாலும், மாற்றிய இடம் தராததாலும் ஆறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்ககோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ….
திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி சிங்கிளாஞ்சேரி பகுதியில் சாலைகுறுக்கே செல்லும் ரயில்வே கேட் வாகனம் பொதுமக்கள் கடக்க மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் இடங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது.
இதில் மேம்பாலம் அமைய பெற்றுள்ள இடத்தில் வசிக்கும் 6 எளிய குடும்பங்களிடம்
மாற்று வீடும், இழப்பீடாக ரூபாய் 10 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உறுதி அளித்துள்ளனர்.
8 ஆண்டுகளுக்குப்பிறகு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு குடியிருக்கும் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாலம் கட்ட திட்டமிட்டபோது நிலம் கையகப்படுத்தப்பட்ட இழப்பீடு தொகையின் மதிப்பின்படி ரூபாய் 10 லட்சம் தராமல் ரூபாய் 3.50 லட்சம் கொடுத்துவிட்டு தற்போது வீட்டை காலி செய்து இடித்துள்ளனர்.
இதனால் வழங்ககோரியும் சிங்கிளாஞ்சேரி பகுதி 6 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகள், கூலிவேலை, ஆடு, மாடுகள் என வாழ்வாதாரத்தை இழந்து ஏமாற்றப்பட்டதால் திருவாரூர் மாவட்டஆட்சியர் விசாரணை செய்து வாழ்வாதாரத்தை பாதுகாத்து, மாற்று இடமும், கூடுதல் இழப்பீடு தொகையும், நிவாரணமும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமு மணிமேகலை, நாகராஜன் மஞ்சுளா, சுப்பம்மாள் செல்வராஜ், ராமு தினேஷ், ரமேஷ் இந்திரா, சாமிநாதன் முத்துலட்சுமி ஆகியோர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.