in

சிவகாசி அருகே வெடி விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கூடாது பட்டாசு ஆலையை மீண்டும் திறக்க கோரி பட்டாசு ஆலை ஊழியர்கள் மாறி மாறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகாசி அருகே வெடி விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கூடாது என ஒரு பிரிவினரும் அதே பட்டாசு ஆலையை மீண்டும் திறக்க கோரி பட்டாசு ஆலை ஊழியர்கள் மாறி மாறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் உள்ள கனிஷ்கர் பட்டாசு ஆலை அருகே பட்டாசு நடந்த வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையை மூடக்கோரி ஒரு தரப்பினரும், திறக்கக்கோரி ஒரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் கிராமத்தில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி கனிஷ்கர் பட்டாசு காலையில் அருகே அந்த ஆலைக்கு சொந்தமான கடையில் நடந்த வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பட்டாசு ஆலை மற்றும் தமிழக அரசும் நிவாரண தொகையும் வழங்கி பட்டாசு ஆலையின் உரிமம் மாவட்ட நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட இந்த பட்டாசு ஆலையை மீண்டும் திறக்கப்படுவதாக கேள்விப்பட்டதை தொடர்ந்து அதனை சுற்றியுள்ள 5 கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பட்டாசு ஆலையை திறக்க கூடாது எனவும் திறந்தால் அதிலிருந்து வரும் நச்சுப் புகையால் ஆடு , மாடுகள் பாதிக்கப்படுவதாகவும் ஆகையால் இந்த பட்டாசு ஆலைகளை திறக்க கூடாது என்று ஒரு தரப்பினர் மனு அளித்தனர்.

மேலும் இந்த பட்டாசு ஆலையை திறக்க கோரி பட்டாசு ஆலையில் வேலை செய்த 100க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த பட்டாசு ஆலை மூடப்பட்டதால் தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் என்றும் எனவே இந்த பட்டாசு ஆலையை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டாசு ஆலை தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த கனிஷ்கர் பட்டாசு ஆலையை திறக்கக் கூடாது என்று ஒரு தரப்பினரும் திறக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

1.வளர்மதி (பட்டாசு ஆலையை திறக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்த தரப்பினர்)

2. ஜெயமுருகன் பட்டாசு ஆலையை திறக்க வேண்டும் என மனு அளித்த தரப்பினர்

What do you think?

காரியாபட்டி 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோயில் 1008 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் அவரது நண்பர் கைது செம்பனார்கோவில் காவல்துறை நடவடிக்கை