நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி ஆண்டான் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் வீட்டின் முன்பு படுத்து உறங்கிய கூலி தொழிலாளியை மர்ம கும்ப கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்தது . இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நடுப்பட்டி பொது மக்கள் நிலக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இன்று இரண்டாவது நாளாக கொலை செய்யப்பட்ட ஆண்டான் என்பவரது பிரேதத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நடுப்பட்டி, கரியாம்பட்டி பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பிலும் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பிலும் இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
அதில் கூலி தொழிலாளி ஆண்டானை படுகொலை செய்த மர்மக் கும்பலை சேர்ந்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் ஆண்டான் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை பயணத்தை வாங்க மாட்டோம் என கூறினர்.
கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வருவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.