வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு
வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க வந்த தாய், தந்தை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்கா கூ த்திப்பாறை பகுதியில் விசித்து வருபவர் ராமதாஸ். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். ஐடிஐ படிப்பு முடித்த இவர் திருமணமான நான்கு மாதத்தில் சவுதி அரேபியாவிற்கு சமையல் உதவியாளர் பணிக்கு சென்றுள்ளார்.
சென்ற ஒரு மாதம் மட்டுமே பணிகள் வழங்கப்பட்டதாகவும் பல்வேறு காரணங்கள் கூறி தனக்கு பணி வழங்கவில்லை எனவும் இதன் காரணமாக கடந்த ஆறு மாதமாக ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு மிகுந்த சிரமத்துடனும் மன வேதனையில் உள்ளதாகவும் தன்னை இந்தியாவிற்கு அழைத்து வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருமணமான நான்கு மாதத்தில் தனது மகன் வெளிநாடு சென்றதாகவும் சவுதி அரேபியாவில் உள்ள தனது மகனை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தாய் தந்தை,தந்தை இருவரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து இந்த மனோ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.