in

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும் அந்த மனுவில் தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரி கிரசர்களிலிருந்து செயற்கை மணல் எம் சான்ட் , பீ சான்ட் , ஜல்லி ஆகிய கனிமங்களை எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு ட்ரான்சிட் பாஸ் கொடுக்க மறுக்கும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனுமதி பெறாமல் முறைகேடாக நடைபெற்று வரும் கல்குவாரி, கிரசரவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 5.3.2025 முதல் கல்குவாரி கிராஸரின் எம்சாண்ட் பிசாண்ட் ஜல்லி போன்ற கனிமங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் விலை உயர்த்தியதை திரும்ப பெற்று பழைய விலைக்கு வழங்க வேண்டும் என்றும் தேனி மாவட்டத்திலிருந்து போடி, குமுளி, கம்பம் மெட்டு வழியாக தினசரி முறைகேடாக கேரளாவுக்கு கனிமங்கள் கடத்திச் சென்று அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை ஏற்படுத்தி வருவதை தடை செய்ய வேண்டும் என்று கூறியும் மனு அளித்தனர்.

இந்த மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வருகை புரிந்ததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்கு நுழைவதற்கு முயற்சி செய்யும் பொழுது காவல்துறைக்கும் லாரி உரிமையாளர் சங்கத்தினருக்கும் சலசலப்பு ஏற்பட்டது.

பின்பு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிளை மனு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

What do you think?

தேனி அருகே கோலகலமாக தொடங்கிய மூன்றாவது புத்தகத் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல நடிகர் சுமன்