in

செல்ல பிராணிகளாகும் சிலந்தி – பாம்பு – உடும்பு – முள்ளம் பன்றி போன்ற காட்டு விலங்குகள்

வித்தியாசமான செல்ல பிராணிகளாகும் சிலந்தி – பாம்பு – உடும்பு – முள்ளம் பன்றி போன்ற காட்டு விலங்குகள் பார்ப்போரை கவர்ந்து வருகிறது

ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற செல்ல பிராணிகள் வீட்டில் வைத்து வளர்ப்பது வழக்கம். இதையெல்லாம் கடந்து வெளிநாட்டு வகைகளைச் சார்ந்த வளர்ப்பு சிலந்தி, வளர்ப்பு தேள், வளர்ப்பு பல்லி, வளர்ப்பு பாம்பு போன்றவையும் தற்போது செல்ல பிராணிகளாகி வருகிறது. இவற்றை வளர்க்கும் ஆர்வம் இயற்கை ஆர்வலர்களிடையே தற்போது பரவலாகி வருகிறது. இதையொட்டி, வர்த்தகமும் பெரிய அளவில் நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுவது வழக்கம் கால்நடைகளோடு கோழி புறா இனங்களும் வழங்கப்பட்டு வருகிறது படித்த இளைஞர்கள் இளம்பெண்கள் வீட்டிலேயே வெளிநாட்டு பறவைகள் மீன்கள் உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தஞ்சையை சேர்ந்த இளைஞர்கள் பலரும் இயற்கை மற்றும் விலங்கினங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் காட்டு விலங்குகளான பாம்பு பல்லி பூரான் சிலந்தி கீரிப்பிள்ளை உடும்பு உள்ளிட்டவற்றையும் வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேபோல் தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தைச் சேர்ந்த 24 வயது இயற்கை ஆர்வலர் எம்.ராபின் வீட்டிலேயே சிலந்தி, ஓணான், பாம்பு, புழு போன்றவற்றை வளர்ப்பது மட்டுமல்லாமல், அவற்றை விற்பனையும் செய்து வருகிறார். சிறு வயதில் இருந்தே பறவைகள் மீன்கள் வளர்க்கும் ஆர்வம் அதிகம் இருந்த ராபின் பொறியியல் பட்டதாரி இருந்த போதும் உணவு புழுக்களை வீட்டில் வளர்த்து வந்த நிலையில் பலரும் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிக்காக புழுக்கள் வாங்க ஆர்வம் காட்டினார். அப்போது அவர்களிடம் கேட்கும்போது செல்ல பிராணியாக பாம்பு தேள் பள்ளி சிலந்தி உள்ளிட்டவருக்கு புழு உணவாக வழங்கப்படுவதாக கூறியதை அடுத்து இவைகளையும் வளர்க்கலாம் என்ற ஆர்வத்தில் பல வகையான பாம்புகள் 10க்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் 4 க்கும் மேற்பட்ட பள்ளி வகைகள் உடும்பு உள்ளிட்டவற்றையும் வளர்த்த வருகிறார்

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மேத்யூ என்ற பொறியியல் பட்டதாரி சிறு வயது முதலே பறவைகள் மீன்கள் மீது ஆர்வம் கொண்டு அவற்றை வளர்க்க ஆரம்பித்து இணையதளம் மூலம் என்னென்ன காட்டு விலங்குகளை நாட்டில் வளர்க்க முடியும் என பார்த்து அவைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கி வந்து அதற்காக ஒரு பெரும் தோட்டத்தையே உருவாக்கி அதில் பல வகையான பறவைகள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆமை குஞ்சுகள், ஆப்பிரிக்கன் கிளிகள் சீனாவைச் சேர்ந்த சிறிய ரக கோழி குஞ்சுகள் ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட உடும்பு முள்ளம்பன்றி பலவகையான மீன்கள் தைவான் நாட்டு ஆடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகையில் உயிரினங்களை வளர்த்து வருகிறார்.

இவற்றை செல்லப்பிராணியாக ஆரம்பத்தில் வளர்த்து வர இவை பெருகப்பெருக இவற்றை விற்கவும் தொடங்கி தற்போது மிகப்பெரிய வணிகமாக மாறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் மேத்யூ.

இதன் மூலம் டரான்டுலா என்கிற பெரும் சிலந்தியை வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. இதில், பிரேசில் நாட்டு வகையைச் சார்ந்த சாக்கோ கோல்டன், கர்லி ஹேர், சாலமன் கிங் பேர்டு ஈட்டர் உள்பட 15 வகையான பெரும் சிலந்திகள் எளிதில் கையாளக்கூடிய இச்சிலந்திகளைக் குழந்தைகள் உள்பட யார் வேண்டுமானாலும் கையில் எடுத்து விளையாடலாம். இதனால் மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது.

இச்சிலந்திகள் 7 முதல் 12 அங்குலம் வரை அகலமுடையது. சிலந்தி ஒரு நேரத்திற்கு ஆயிரம் முட்டைகள் வரை இடும் இதில் 500 முட்டைகள் பொறித்து குஞ்சாகும் வளர்ந்த பிறகு இதை பிறருக்கு கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிலர் மீன் தொட்டிகளைப் பராமரிப்பது போன்று, சிலந்திகளுக்கும் உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி வளர்க்கின்றனர். இயற்கையை விரும்புபவர்களுக்கு இதனுடைய இயக்கத்தை ரசிப்பதன் மூலம் மன ஆறுதலை தருகிறது. அதனால், இவற்றை வளர்க்கும் ஆர்வம் பரவலாகி வருகிறது.

இதேபோல,வளர்ப்பு பாம்புகளும் பிரபலமாகி வருகிறது. இதில், மத்திய ஆப்பிரிக்க வகையைச் சார்ந்த பால் பைத்தான் பாம்பு, அமெரிக்காவில் சோளக்காட்டில் காணப்படும் கார்ன் ஸ்நேக் என்கிற பாம்பும் நிறைய விற்பனையாகின்றன. இவை நம்மூர் சாரைப்பாம்புகளைப் போன்றவை. அதிகபட்சமாக ஐந்தரை அடி வரை வளரக்கூடியது. இவை விஷமற்ற பாம்புகள் என்பதால், பொழுதுபோக்குக்காக வீட்டில் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. சாதாரணமாக கையில் எடுத்து விளையாடலாம். சிலர் ராசி பலன்கள் அடிப்படையில் நிறத்தைப் பார்த்து வாங்குகின்றனர். குட்டிப் பாம்பு ரூ. 30 ஆயிரத்திலிருந்து பெரிய பாம்புகள் ரூ. 10 லட்சம் வரை விலை போகிறது. பால் பைத்தான் பாம்புகளில் நிறைய வகைகள் உள்ளன.

பிரேசில், மத்திய அமெரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படும் ராட்சத பல்லிகளும் உள்ளன. பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளை என 5 வண்ணங்களில் உள்ள இந்த பல்லிகள் ஏறத்தாழ 6 அடி வரை வளரக்கூடியது. காய்கறிகள், பழங்கள், செம்பருத்தி,ரோஜா இதழ்களை உண்ணக்கூடியது. சிறியது முதல் பெரிய பல்லிகள் ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை விற்கப்படுகிறது.

வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, கோழி போன்று வெளிநாட்டு சிலந்தி, பாம்பு, தேள், பல்லி, ஓணான் போன்றவையும் செல்ல பிராணிகளாக நிறைய பேர் வளர்க்கின்றனர். தஞ்சாவூரில் மட்டுமே கிட்டத்தட்ட 10 பேர் வளர்த்து வருகின்றனர். கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து என்னிடம் ஏறத்தாழ 500 பேர் வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்தச் செல்ல பிராணிகளை வளர்ப்பதற்கு வனத் துறையின் பரிவேஷ் என்கிற இணையதளத்தில் பதிவு செய்தால், அனுமதி கிடைக்கும். இதன் மூலம் இந்தச் செல்ல பிராணிகளை வளர்ப்பதற்கு எந்த வித பிரச்னையும் இருக்காது மேலும் தற்போது இதை வளர்ப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விதிமுறைகள் படி இவற்றை வளர்க்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் வளர்க்கப்படும் பாம்பு சிலந்தி பல்லி உடும்பு கீரி முள்ளம்பன்றி ஆமைக்குஞ்சுகள் சீன கோழி குஞ்சு மற்றும் செல்லப்பிராணிகளான வாத்து கோடி ஆடு பறவைகளும் இதில் அடங்கும்.

What do you think?

தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் பகீர் பேட்டி.

திருவிடைமருதூர் அருகே சனி பகவான் கோயிலில் யாகம் நடத்திய ஜப்பானியர்