ஈஸ்டர் திருநாள் தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறையொட்டி திருச்சிலுவை பயணம்
நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறையொட்டி திருச்சிலுவை பயணம் நடைபெற்றது. சிலுவையை சுமந்தவாறு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாளையங்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 5ஆம் தேதி சாம்பல் புதன் உடன் தொடங்கியது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்து எழுந்து வரும் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வழிபடுவர். இந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிலுவை பாதை வழிபாடு செய்யப்படும்.
அதன்படி தவக்காலத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இன்று நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் திருச்சிலுவை பயணம் நடைபெற்றது பாளையங்கோட்டை மதுரை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து சிலுவையை சுமந்தவாறு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஊர்வலம் தூய சவேரியார் பேராலயத்தில் தொடங்கிய திருச்சிலுவை பயணம் பாளையங்கோட்டை காவல் நிலையம் தலைமை தபால் நிலையம் வழியாக லயோலா கான்வென்ட் பள்ளியில் நிறைவு பெற்றது.
தொடர்ந்து ஆயிரம் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்ற திருப்பலி நிகழ்வில் திரளாணோர் கலந்து கொண்டு பிராத்தனை மேற்கொண்டனர்.