in ,

பிள்ளையார்பட்டி ஶ்ரீ கற்பக விநாயகர் விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா

பிள்ளையார்பட்டி ஶ்ரீ கற்பக விநாயகர் விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா ஆறாம் திருநாள் கஜமுக சூரசம்காரம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு கஜமுக சூரசம்காரம் விழா விமர்சையாக நடைபெற்றது இக்கோவிலில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் விநாயகப் பெருமான் பல்வேறு வாகனங்கள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான ஆறாம் திருநாளில் சூரசம்கார விழா கோவில் திருக்குளத்தின் முன்பு நடைபெற்றது

இங்கு மட்டுமே நடக்கக்கூடிய விநாயகப் பெருமானின் சூரசம்ஹார விழா இக்கோவிலின் சிறப்பு இவ்விழா பற்றிய புராணங்களில் மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற கஜமுகன் இந்திரன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். கஜமுக சூரனை கொல்வதற்காக இறைவன், விநாயகப் பெருமானிடம் அசுரனை வதம் செய்யும்படி அனுப்பி வைத்தார்.

யானை முத்தோடும், மனித உடலோடும் தோற்றுவித்த கஜமுக சூரனை விநாயகர் பெருமான் தனது பல்வேறு ஆயுதங்கள் கொண்டு போரிட்ட விநாயக பெருமான் இறுதியாக தனது தந்தத்தால் சூரனை வதம் செய்தார் என புராணங்களில் கூறப்படுகிறது

இந்நிகழ்வுவை உணர்த்தும் வகையில் இக்கோவிலில் சூரசம்கார விழா நடைபெற்றது

முன்னதாக சர்வ அலங்காரத்தில் விநாயகப் பெருமான் வெள்ளி ரதத்தில் எழுந்தருளியினர் தொடர்ந்து விநாயகப் பெருமானிடம் தந்தம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் பக்தர்கள் யானை முகம் கொண்ட அசுரனை தோளில் சுமந்து விநாயகப் பெருமானை மூன்று முறை சுற்றி வலம் வர செய்து தெப்பக்குளம் முன்பு எழுந்தருள செய்தனர் தொடர்ந்து விநாயகர் பெருமான் மங்கல வாத்தியங்களுடன் கோவிலை சுற்றி வளம் வந்து திருக்குளம் முன்பு அத்திக்கோலம் வரையப்பட்ட இடத்தில் சூரசம்காரம் நடந்தன சிவாச்சாரியார்கள் விநாயகர் பெருமானிடம் உள்ள தந்தத்தை எடுத்து அசுரனின் கழுத்தில் வைத்தனர் விநாயக பெருமானுக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.

What do you think?

பாகனேரி ஸ்ரீ புத்தர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பிரார்ததனை செய்து வழிபாடு செய்தனர்

செஞ்சி ஒன்றியம் ஊரணித் தாங்கள் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்