கனமழை எச்சரிக்கை காரணமாக பைபர் படகுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நாகை மாவட்ட மீனவர்கள்: வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி துறைமுகம்: 3500 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது.
அதன்படி ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். மேலும் நாகை துறைமுகத்தில் நேற்று ஒன்றாம் எண் புயல எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகூர் பட்டினச்சேரி துவங்கி கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, செருதூர், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் வேதாரண்யம் கோடியக்கரை உள்ளிட்ட சுமார் 30 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் 3500 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த மீனவ கிராமத்தின் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் விற்பனை செய்யும் மீன்பிடித்தளம் மற்றும் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் ஆகிய வெறிச்சோடி காணப்படுகிறது.