in

பொது மக்களின் கவனத்தை ஈர்த்த செய்தித்தாள் வடிவில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்


Watch – YouTube Click

பொது மக்களின் கவனத்தை ஈர்த்த செய்தித்தாள் வடிவில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்

 

பழனி அருகே கோவில் திருவிழாவில் செய்தித்தாள் வடிவில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

பழனி அருகே நெய்க்காரப்பட்டி ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இட் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்கும் விழா இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டு செல்ல வருகை தருவார்கள்.

இந்த நிலையில் திருவிழாவில் பொதுமக்களை மற்றும் பக்தர்களைத் தவிர அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செய்தித்தாள் வடிவில், சுவாரசியமாக பல்வேறு தலைப்புகளில் விளையாட்டு செய்திகள் தலைப்பில் ரேஸ் ஓட்டும் ரேக்ளா நாயகன், மற்றும் கல்யாண மாலை மணப்பெண் தேவை, திருவிழாவில் பிளக்ஸ் உண்டியல் திருட்டு, இன்ஸ்டாகிராம் இம்சை மன்னன், போன்ற பல சுவாரசியமான வாக்கியங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பேனர் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது பல பகுதிகளில் திருமண பேனர்கள், பத்திரிகைகள், ஆதார் அட்டை வடிவிலும், மாத்திரை அட்டை வடிவிலும் பல்வேறு சுவாரசியமான விஷயங்களைக் கொண்டு சுவாரசியமாக இளைஞர்கள் வைக்கிறார்கள். இதுபோன்று திருமண பானர்கள் பத்திரிகைகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்து பெரிதளவில் பேசப்பட்டு தற்போது அது ஒரு நடைமுறையாக கொண்டுள்ளனர் இளைஞர்கள்.

தற்போது கோவில் திருவிழாவிலும் இதுபோன்ற பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.


Watch – YouTube Click

What do you think?

பாதாள செம்பு முருகன் பக்தருமான இயக்குனர் வசந்த் மனைவியுடன் சாமி தரிசனம்

பன்றிமலை பகுதியில் உணவு தேடி யானைகள் பொதுமக்கள் அச்சம்..