in

பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார்


Watch – YouTube Click

பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார்

பசுமையான கானகுரல் நின்றுவிட்டது. அழியாத மெல்லிசை பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் வசந்தத்தை வீசிய குரல் இன்று ஒலிக்க மறந்து விட்டது.

பி. ஜெயச்சந்திரன் 80 சினிமா பாடல்கள், பக்தி மற்றும் மெல்லிசை பாடல்கள் மூலம் இதயங்களைத் தொட்ட அவரது ஆழமான குரல் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றது…

தமிழ் மட்டும் இன்றி பல மொழிகளில் 16000 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன் . . மனைவி லலிதா, மகள் லட்சுமி, மகன் தினநாதன் ஆகியோருடன் வசித்து வந்தவர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் இரவு 7.55 மணியளவில் காலமானார் என்று மருத்துவமனை தெரிவித்தன.

வியாழக்கிழமை அவரது வீட்டில் மயங்கி விழுந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் வியாழக்கிழமை திருச்சூரில் காலமானார்.

இசை மீது உள்ள ஆர்வத்தால் இவரது அண்ணன் சுதாகரன் இசை தந்தையாக இருந்து இவருக்கு வழிகாட்டினார். இசை ஆசிரியர் கே வி ராமநாதனிடம் முறைப்படி சங்கீதம் கற்றவர் 6 வயதிலேயே மிருதங்கம் வாசித்து பல இசை போட்டிகளின் வெற்றி பெற்றார் . 1986 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார்.

மலையாள சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பைப் பாராட்டி 2020 ஆம் ஆண்டில் அவருக்கு ஜே சி டேனியல் விருது வழங்கப்பட்டது. கேரளாவில் ஐந்து முறையும், தமிழ்நாட்டில் இரண்டு முறையும் மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

விலங்கியல் பட்டம் பெற்றவர் செமிஸ்ட்…டாக , சென்னையில் வேலை பார்த்தவர் அப்போதைய திரைப்பட இயக்குனர் ஏ. வின்சென்ட்டை சந்தித்த போது சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார்.

1967 இல் பிரேமா என்ற பாடகியுடன் இணைந்து முதல் மலையாள பாடலை பாடினார் ஜெயச்சந்திரன் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்டோருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

எம் எஸ் வி முதல் ஜிவி பிரகாஷ் வரை ஏராளமானவருடன் பணியாற்றிய பெருமைமிக்கவர். காதல் பாடல் மட்டுமல்ல சோகப் பாடல்கலாலும் நெகிழ வைத்து கண்ணீரை வரவைத்தவர் இன்று அவரது குரலின் முலம் அழியாத சுவடுகலை விட்டு சென்றிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

நயன் தனுஷ் வழக்கு… கடுமையாக உத்தரவு போட்ட நீதிபதி

Game Changer Movie Review…..Indian 2…வே பெட்டர்… ரசிகர்களை ஏமாற்றிய ‘கேம் சேஞ்சர்’!