கவிஞர் நந்தலாலா காலமானார்
கவிஞர் நந்தலாலா இன்று காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த இவர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார்.
இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளிட்டுள்ளார்.
கவிஞரும் பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
கவிஞர் நந்தலாலாவின் மரண செய்தியை கேட்ட நான் பெரும் துயர் அடைந்தேன் மறைவு செய்தியை ஏற்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றேன் தனித்த அடையாளமாகவும் தன்னிகரற்ற முழக்கமாகவும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த ஒலி ஓய்ந்தது.
தோழன் நந்தலாலாவிற்கு எனது வீர வணக்கம் என தெரிவித்துள்ளார். நந்தலாலாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.