பட்ட பகலில் கோவில் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து திருடிய நபர், போலீசார் கைது
முத்துப்பேட்டையில் பட்ட பகலில் கோவில் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம் நிலையில் காலை பக்தர்கள் கூட்டம் இல்லாத நிலையில் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து உள்ளார் இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
கோவில் நிர்வாகிகள் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன் அங்கு கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் கோவில் உள்ளே புகுந்த ஒரு இளைஞர் கருவறை எதிரே இருந்த உண்டியலை அசால்ட்டாக உடைத்து இருந்த சில்லறை காசுகளை எடுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் நகரில் பல இடங்களில் தீவிரமாக தேடியதில் புதிய பேருந்து நிலையத்தில் மறைந்து இருந்த அந்த இளைஞரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் இளைஞர் முத்துப்பேட்டை அடுத்த பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ்(27) என்றும் இவர் ஏற்கனவே பல திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும், பல வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்றும் தெரிய வந்தது இதனையடுத்து வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை போலீசார் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிகளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் ஒரு கோவலில் பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.