in

திண்டிவனம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திண்டிவனம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

 

திண்டிவனம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்த போலிசார் இரண்டு பேரை கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபத் சிராஜ் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சந்தேகப்படும்படியாக அந்த வழியே வந்த பிக்கப் வேலை நிறுத்தி சோதனை செய்த போது, வானில் உள் அரை அமைத்து பாக்கெட்டுகளில்
அனுப்பி வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வருவது தெரிய வந்தது.

இந்நிலையில் கஞ்சாவையும்,வேனையும் பறிமுதல் செய்த போலீசார் ,அதில் வந்த கேரள மாநிலம் காசக்கோடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரது மகன் உதயகுமார் (44) சலாம் என்பவரது மகன் ஆசிஃப் (25) ஆகிய .இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் கஞ்சா எங்கிருந்து வருகின்றது? யாருக்கு சப்ளை செய்யப்படுகின்றது?,, விழுப்புரம் மாவட்டத்தில் யாரேனும் முக்கிய குற்றவாளிகள் உள்ளனரா ? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.பின்பு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திண்டிவனம் அருகே பிக்கப் வேனில் கடத்தி வறப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

திண்டிவனம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா

இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா பட்டாபிஷேகம்