திருவாடானை அருகே கிணற்றில் மிகுந்த மூதாட்டியின் உடல் போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம், திருவடானை அருகே பாண்டுகுடி கிராமத்தில் ஒதுக்குப்புறமாக தரை தல கேணி ஒன்று உள்ளது.
இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கேணியில் மூதாட்டியின் உடல் மிதப்பதாக தொண்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகானந்தம், தனி பிரிவு காவலர் ராசு உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருவாடானை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் பொறுப்பு ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடம் வந்து கிணற்றில் இறங்கி மூதாட்டியின் உடலை மீட்டனர்.
இவர் யார் என்று விசாரித்த பொழுது அவரது பெயர் இந்துராணி என்பதும் இவர் எதற்காக கிணற்றில் விழுந்தார் என்றும் விசாரித்து வருகின்றனர்.