in

புதுச்சேரி உலக நாயகி கோவிலில் அம்மன் நகை திருட்டு போலீசார் விசாரணை


Watch – YouTube Click

உலக நாயகி கோவிலில் அம்மன் நகை திருட்டு- போலீசார் விசாரணை

புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் முத்தாலம்மன் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகம் முடிந்து சில நாட்களில் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டிருந்தது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுவரை கோவில் உண்டியலை உடைத்த திருடர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் உருளையன்பேட்டை முல்லை நகரில் பிரசித்தி பெற்ற உலக நாயகி அம்மன் கோவிலில் அம்மன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் நேற்று இரவு பூஜைகள் முடித்து வழக்கம்போல கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை பூஜாரி குமார் கோவிலை திறந்த போது, அம்மன் கழுத்தில் போட்டிருந்த 5 பவுன் நெக்லஸ், கம்மல் உட்பட நகைகள் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். கோவில் நிர்வாகத்தினர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். கோவில் பூட்டை உடைக்காமல் சுவர் ஏறி உள்ளே குதித்து, அங்கிருந்த அம்மன் சிலை கிரில் கேட்டுக்குள் கையை விட்டு நெக்லஸ், கம்மலை எடுத்தது தெரியவந்தது. திருடர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவர்கள் தான் நெல்லித்தோப்பு முத்தாலம்மன் கோவிலிலும் திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்த வழக்கில் சிறப்பான தீர்ப்பு நன்றி தெரிவித்த பாஜக நிர்வாகி

பத்திரிக்கை சுதந்திரம் என்பது அனைத்துமே திமுகவிற்கு விலை போய் விட்டது எம் ஆர் விஜயபாஸ்கர் பேச்சு