in

தேனியில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் துறையினர் விழிப்புணர்வு

தேனியில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் துறையினர் விழிப்புணர்வு

 

தேனியில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வாசகம் வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் துறையினர்
தமிழகம் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே போல் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்திப்பட்டு வருகின்றனர்.

இது போல் தேனி மாவட்டகாவல்துறை சார்பில் தேனி பங்களா மேட்டில் சைபர் க்ரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் பொது மக்களுடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மூன்று சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸினை தேனி மாவட்ட காவல்துறை சார்பில் வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழிப்புணர்வில் சமூக வலைதளங்களில் முகவரி தொலைபேசி எண் இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் அல்லது புகைப்படங்களை பகிரவும் பரிமாறக் கொள்ள வேண்டாம் என்றும், கணினியுடன் இணைக்கும் போது எப்போதும் யு எஸ் பி சாதனங்களை வைரஸ்களுக்காகவே ஸ்கேன் செய்யவும் என்றும், தெரியாத நபர்களிடமிருந்து வரும் ஈமெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும், மோஸ்கோ அமேசான் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கார் பணம் பரிசாக விழுந்துள்ளது என்று எனக் கூறி பணம் கட்ட சொன்னால் பணம் கட்ட வேண்டாம் என்றும் உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை வானங்களில் ஒட்டியும் பொதுமக்களிடையே நோட்டீஸை வழங்கியும், இது போன்று குற்ற சம்பவங்கள் குறித்து 1930 என்ற சைபர் குற்ற புகார் எண்ணுக்கு அழைத்து பயனடைய வேண்டும் என்றும் கூறி தேனி மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

What do you think?

மகராஜா வெற்றி ஆகாச வீரனுக்கு கைகொடுத்ததா?

மண்ணுலகை மட்டுமல்ல விண்ணுலகை ஆளக்கூடியவர்கள் பெண்கள்