காவல் துறையினர் சோதனையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்
இரயிலில் கஞ்சா கடத்தல்,இருப்புப் பாதை காவல் துறையினர் சோதனையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது
மயிலாடுதுறையைச் சார்ந்த இருப்பு பாதை காவல்துறையினர் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த தகவலை அடுத்து, கச்சிகுடாவில் இருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சீர்காழி அருகே ஓடும் ரயிலில் S1 என்ற முன்பதிவு பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது 49 ஆம் எண் இருக்கையில் கேட்பாராற்று ஒரு பை கிடந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெட்டியில் உள்ள பயணிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுக்கா முகவனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து செல்வம் என்பவர் தனது பை என்பதை ஒத்துக் கொண்டார்.
பையில் இருந்து இரண்டு பொட்டலங்களாக கட்டப்பட்டிருந்த 16 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது…