அரசியல் சூழ்ச்சி… சாட்டிலைட் உரிமையை வாங்க மறுக்கும் முன்னணி சேனல்கள்…திணறும் வெங்கட் பிரபு
அரசியல் சூழ்ச்சி… கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க மறுக்கும் முன்னணி சேனல்கள்…திணறும் வெங்கட் பிரபு
சினிமா மற்றும் அரசியல் என்று இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் வாக்களிப்பதற்காக சென்னை வந்திருக்கிறார் விஜய்.
இம்மாத இறுதிக்குள் கோட் திரைப்படம் முடிக்கப்பட்டு செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்ட நிலையில் வெங்கட் பிரபுவுக்கு ஆப்பு அடித்தது Sun Pictures.
எப்பொழுதுமே சன் நெட்வொர்க் தான் விஜய் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கும். கோட் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பனைக்கு ஆரம்பித்த போது சன் டிவி தான் முதலில் GOAT படத்தின் சேட்டிலைட் உரிமை வாங்குவதாக இருந்தது. திடீரென்று விஜய் அரசியலில் இணைந்ததை காரணம் காட்டி பல்டி அடித்து விட்டது. சன் நெட்வொர்க்… கை தொடர்ந்து ஜி நெட்வொர்க்கிடம் கேட்டதற்கும் எங்களிடம் ஃபண்டு இல்லை என்று ஒதுங்கி விட்டார்கள்.
கடைசியாக விஜய் டிவியிடம் பேசியபோது 12 கோடி…இக்கு படத்தை கேட்டிருக்கின்ற இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தூது அனுப்பி இருக்கிறதாம்.