அரசியல் அழுத்தம் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி
பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நீயா நானா நிகழ்ச்சிகளுக்கு ரசிகர் மத்தியில் வரவேற்பு அதிகம் இந் நிகழ்ச்சியில் பல சமூகப் பிரச்சினைகளை ஆராயப்படும் நடுவரான கோபிநாத் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் .தற்போது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருக்கும் மும்மொழி கொள்கையை பற்றி ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்கள் என்று தலைப்பில் இந்த வாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது
அதற்கான ஷூட்டிங் முடிக்கப்பட்டு நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்த்த அந்த எபிசோட் ஒளிபரப்பாகாததால் ரஸிகர்களுக்கு ஷாக். அரசியல் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அந்த எபிசோடு கைவிடப்பட்டு வேறொரு டாபிக்கில் இந்த வாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானால் புதிய கல்வி கொள்கையை கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்படும் என்று கருதி பிஜேபி.. னர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
அண்மையில் மோடியின் புகைப்படத்தை வெளியிட்ட ஆனந்த விகடன் வலைதளம் முடக்கப்பட்டது அதேபோல் தற்பொழுது விஜய் டிவிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதால் கடுப்பான நெடிசன்கள் பாஜக …வை கடுமையா விமர்சித்து வருகின்றனர் கருத்து சுதந்திரம் என்பதே தற்பொழுது கேள்விக்குறியாய் இருக்கிறது என்று குரல் எழுப்பி வருகின்றனர்.