விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ளது
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் இடையே மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் பற்றி அரசியல் கட்சி நிறுவனம் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து என் வாக்கு விற்பனைக்கு இல்லை என்பதற்கான லோகோவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட அங்கரிக்கபட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தால் மாவட்ட ஆட்சியர்
தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்த அனைத்து விதிமுறைகளும் இன்று முதல் பின்பற்றப்படுவதாகவும் அரசியல் கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு முறையாக அனுமதி பெற வேண்டும் எனவும்,
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும் எனவும்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 1680 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என இரண்டு கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அவற்றிலும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் இப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.