in ,

திருவாரூர் காட்டூரில் பொற்பவள காளியம்மன் கோயில் காளிகட்டுத் திருவிழா

திருவாரூர் காட்டூரில் பொற்பவள காளியம்மன் கோயில் காளிகட்டுத் திருவிழா

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் பொற்பவள காளியம்மன் கோயில் காளிகட்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம்.

திருவாரூர் அருகே காட்டூர் மேல தெருவில் அமைந்துள்ள பொற்பவள காளியம்மன் கோயில் காளிகட்டுத் திருவிழா திங்கள் கிழமை காப்பு கட்டுதல், துர்க்கை அம்மன் வழிபாடுடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் காளியம்மன் வீதி உலா நடைபெற்றது. கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக காளியம்மன் நடனம் ஆடியவாறு வலம் வந்தார்.

மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக பொற்பவள காளியம்மன் மற்றும் மகாகாளியம்மன் ஆகியவை இணைந்து நடனமாடும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

தினந்தோறும் வீதி உலாக்களுடன் வெள்ளிக்கிழமை மஞ்சள் நீர் விளையாட்டுடன் காப்பு கழற்றப்பட்டு விழா நிறைவடைகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் சிவன் சக்தி அலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

நெல்லையில் இரண்டாவது நாளகவும் பலத்த மழை பெய்தது வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி