in

தஞ்சையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் பேட்டி

தஞ்சாவூர் வெளிநாட்டில் காட்சி பொருளாக உள்ள திருவெண்காடு கோவில் சிலைகளை மீட்டு கொண்டுவர வேண்டும்

தஞ்சையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் பேட்டி

தஞ்சையில் சிவனடியார்கள், முருக பக்தர்கள் மற்றும் அனைத்து ஆன்மீக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீக விழா நடைபெற்றது.

விழாவில் தலைமை ஆலோசகரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான பொன்.மாணிக்கவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது,அனைத்து ஆன்மீக அன்பர்களையும் ஒருங்கிணைப்பதற்காக இந்த ஆன்மீக விழாவை நடத்தினோம்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம் வந்து கோயில்களின் வருமானத்தை பெருக்குவது மட்டுமே. ஆனால் அவ்வாறான பணிகளில் அறநிலையத்துறையினர் ஈடுபடவில்லை.

தமிழகத்தில் உள்ள 34119 இந்து கோவில்களில் தினசரி வருமானம் ரூ.13-ல் இருந்து ரூ.27 தான். இந்த 13 ரூபாய் வருமானத்தை வைத்து கொண்டு கோவில்களில் எவ்வாறு தினந்தோறும் விளக்கு ஏற்ற முடியும் ?

அந்தக் கோவில்களில் மீது ஒவ்வொரு ஆண்டும் வரிவிதித்து விதிமுறைகளை மீறுகிறது. இந்துக் கோவில்கள் மீது அரசு பல்வேறு வரிகளை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசியல் கட்சித் தலைவர் நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் மட்டும் சிறப்பு சாப்பாடு ஒவ்வொரு ஆண்டும் போடப்பட்டு வருவதையும் இந்து கோவில் பணத்திலிருந்து செலவிடபடுவதையும் நாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம். உடனடியாக இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் 10109 கோவில்களின் பூசாரி மற்றும் அர்ச்சகர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.34 மட்டுமே சம்பளமாக கொடுக்கபட்டு வருகிறது. இந்த மிக மிக சொற்ப ஊதியத்தை வைத்து என்ன செய்ய முடியும்.

இதே நிலை நீடித்தால் இனி அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்த கோவில்களில் அர்ச்சகர்களோ, பூசாரிகளோ இருக்க மாட்டார்கள்.

தஞ்சை பெரிய கோவிலில் வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலை போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.திருவெண்காடு கோவில்களின் சிலை வெளிநாட்டில் காட்சி பொருளாக உள்ளது. உடனடியாக அந்த சிலைகளை மீட்டு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

What do you think?

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை…

கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர் இதன் 20 ஆம் ஆண்டு நினைவு தினம்