நான்கு தேசிய விருதை பெற்ற பொன்னியின் செல்வன்… ஏழாவது முறையாக விருதை வென்ற ஏ.ஆர். ரகுமான்
ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய ஏ ஆர் ரகுமானுக்கு இந்த ஆண்டுக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகால தனது இசை பயணத்தில் ஏழாவது முறையாக தேசிய விருதை பெற்றிருக்கிறார்.
இசை புயல் ஏ.ஆர் ரகுமான் ஐந்து முறை தமிழ் படங்களுக்கு இசையமைத்ததற்காகவும் இரண்டு முறை இந்தி படங்களுக்கு இசையமைத்ததற்காகவும் தேசிய விருதை பெற்றிருக்கிறார் ஏ.ஆர் ரகுமான்.
இவரது இசைக்கு அங்கீகாரத்தை கொடுத்தது 1992…. மணிரத்தினம் இயக்கிய ரோஜா படம் .
எழுபதாவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் 2022 ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ ஆர் ரகுமான் பொன்னின் செல்வன் படத்திற்கு இசையமைப்பதற்காக பெற்றிருக்கிறார்.
தேசிய விருதை பெற்ற ஏ ஆர் ரகுமானுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் நான்கு விருதுகளை தட்டிச் சென்றது.
சிறந்த நடிகராக ரிஷப் செட்டி காந்தாரா படத்திற்கு பெற்றார் மற்றும்
சிறந்த நடிகையாக நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேர்வாகியுள்ளார்.
சிறந்த ஒளிபதிவாளர் காண விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக ரவிவர்மனும்,
சிறந்த நடன இயக்குனருக்கான விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காத பாடலுக்காக சதீஷ் பெற்றிருக்கிறார்.