பாளையங்கோட்டை எல்லையம்மன் திருக்கோவில் பூக்குழி இறங்கும் விழா
நெல்லை பாளையங்கோட்டை எல்லையம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவத்தின் சிகரநிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றானது பாளையங்கோட்டை எல்லையம்மன் திருக்கோவில். திருக்கோவிலின் பங்குனி உற்சவம் கடந்த பதினோராம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் அம்பாள் கொலு இருந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் மூர்த்தி ஓமம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து பால்குடம் எடுத்துவரப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து பூ போடுதல் நிகழ்வும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்வும் நடைபெற்றது.
பின்னர் தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பிரதமிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி பராசக்தி என்று கோஷம் முழங்க பூ மிதித்து அம்பாளை வழிபட்டனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.