விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் பிரபலம் காலமானார்
விஜய் டிவியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை லொள்ளு சபா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
சந்தானம் சுவாமிநாதன் பாலாஜி மனோகர் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி நகைச்சுவை நடிகர்களாக சினிமாவில் நடித்து வருகின்றனர்.
லொள்ளு சபா ஆண்டனி நுரையீரல் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
இவருக்கு சந்தானம் பல உதவிகளை செய்து வந்தார் லொள்ளு சபா ஆண்டனி உடல்நிலை மோசம் அடைந்து இன்று காலை உயிரிழந்தார்.
ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பொழுது யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். எனக்கு ஆஸ்துமா பிரச்சனை வந்த பிறகு நுரையீரலில் நீர் கோர்த்துக்கொண்டு பிரச்சனை பெருசாகி விட்டது.
என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள்என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர் என்னை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் தனியாக தவிக்கிறேன் என்று கூறினார். இவரின் மறைவுக்கு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.