மாகே போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்
உயர்த்தப்பட்ட பயிற்சி கால உதவி தொகையை வழங்க கோரி மாகே பிராந்தியத்தில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியின் மாகே பிராந்தியத்தில் இயங்கி வரும் அரசின் ராஜிவ் காந்தி ஆயுர்வேதா கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் (House surgeon)
இன்று முதல் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.தங்கள் பயிற்சி கால உதவி தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 20,000 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தும் இதுவரை வழங்கப்படவில்லை, இதனை உடனே வழங்க கோரி மாஹே ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் அறிவித்த 20,000 ரூபாய் பயிற்சி கால உதவி தொகையை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர்.