திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை
திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.