in ,

கடலூர் அருள்மிகு வீரட் டிஸ்வரர் திரிபுர சுந்தரி ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

கடலூர் அருள்மிகு வீரட் டிஸ்வரர் திரிபுர சுந்தரி ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

 

கடலூர் மாவட்ட செய்தியாளர் ரவி திருவதிகையில் உள்ள அருள்மிகு வீரட் டிஸ்வரர் உடனுறை அருள்மிகு திரிபுர சுந்தரி எழுந்தரளி உள்ள ஆலயத்தில் இன்று பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி திருவதிகையில் உள்ள அருள்மிகு வீராட் டேஸ்வர திருகோவில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திருக்கோவில் இத்திருக்கோவிலில் திலகவதி அம்மையார்சிவ தொண்டு செய்த தலம் அதே போல் அப்பர் பெருமான் சூலை நோயால் பாதிக்கபட்டு பின்னர் இத்திருக்கோவிலில் திலகவதி அம்மையார் சிவனை வணங்கி அப்பருக்கு சூலை நோய் நீங்க பெற்ற தலமாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க திருவதிகையில் உள்ள வீராட்டே ஸ்வர திருக்கோவிலில் இன்று புதன்கிழமை பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு. அதிகார நந்தி
அபிஷேக நந்தி பிரதோஷ நந்தி என 3 நந்தி ஸ்வரருக்கும் பால் தேன் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் என பல்வேறு அபிஷேகங்கள் செய்யட்டு பின்னர் பிரதோஷ நந்தி வெள்ளி கவசம் சாத்தப்பட்ட பின்னர் மஹா தீபாரதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பண்ருட்டி மற்றும் சுற்று புர பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன் நிகழச்சியில்
புதுவை சிவசரவணன் தலமையில் கயிலாய வாத்தியம் முழங்கியது.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 14.11.2024

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது