வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – சண். இராமநாதன்
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சை மேயர் சண். இராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மேயர் சண். இராமநாதன். 800 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 10 ஜேசிபி வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 100 என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
பாதிப்பு ஏற்படும் பகுதியில் உடனடியாக மீட்பு பணிக்கு செல்வதற்கு வசதியாக அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் பணியாளர்கள் தங்கி பணிகளை செய்து வருகின்றனர்.
உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனே அவர்கள் விரைந்து சென்று பணிகள் செய்வார்கள்.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
வெண்ணாறு, வெட்டாறு, புது ஆறு என அதிகளவில் ஆற்று பகுதிகள் உள்ளதால் எவ்வளவு பெரிய மழை வெள்ளம் வந்தாலும் உடனே ஆற்றில் தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் மாமன்னர் இராஜராஜ சோழன் நடவடிக்கை எடுத்தார்.
அதனை பின்பற்றி அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார்.