விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரேமலதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஆலங்குளம், ஏழாயிரம் பண்ணை,ஒ.மேட்டுபட்டி, சாத்தூர் முக்குராந்தல் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பேசிய பிரேமலதா கேப்டனின் தவ புதல்வர் விஜய பிரபாகரனுக்கு கேப்டன் கண்ட அடுத்த வெற்றி சின்னமான முரசு சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை தர வேண்டும்
விஜயபிரபாகரன் நினைத்திருந்தால் தமிழகத்தின் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம் ஆனால் அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால், நம் சொந்த பந்தங்கள் உள்ள இந்த பூமியில் மக்களுக்காக தன் தந்தையின் கனவை சுமந்து கொண்டு விருதுநகரில் போட்டியிடுகிறார்.
படித்தவர், பண்பாளர் இளைஞர், கருணை உள்ளம் கொண்டவர் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு மக்களுக்காக வந்துள்ளார்
விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை இனி அவர் உங்கள் பிள்ளை
அனைத்து தாய்க்குலத்தின் பிள்ளை
அவர் உங்களுக்காக உழைத்து உங்கள் தலைமையில் தான் அவரது திருமணத்தை நடத்த உள்ளேன்
இந்த சின்ன வயசிலேயே தந்தையின் கனவை சுமந்து கொண்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு உங்களுக்காக வந்துள்ளார்.
எனது மகன் வெற்றி பெற்றால் தொகுதி முழுவதும் இலவச தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு பயிற்சி நிறைவு பெற்ற அனைவருக்கும் தையல் மிஷின் வழங்கப்படும்
படித்த படிக்காத இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையம் தொகுதி முழுவதும் சொந்த செலவில் அமைக்கப்படும்
தீப்பெட்டி தொழிற்சாலை பட்டாசு தொழிற்சாலை ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்வு ஏற்படுத்தப்படும்
மற்ற வேட்பாளர்களைப் பற்றி நான் பேசமாட்டேன், மற்றவர்களை குறை சொல்லி அதில் ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நம் கட்சிக்கு இல்லை
நான் விருதுநகர் மக்களை நம்புகிறேன், நாங்கள் சென்னையில் இருப்பதாக நினைக்க வேண்டாம் விருதுநகரில்தான் இனிமேல் இருப்போம்
குடும்ப பாரம்பரிய சொந்த பந்தம், ரத்த பந்தம் இருக்கின்ற விருதுநகர் தொகுதியில் ஜெயபிரபாகரன் உண்மையாக உழைத்து மாநில அளவில் முதன்மை தொகுதியாக கொண்டு வருவோம்
தமிழகம் முழுவதும் அதிமுக தேமுதிக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது
நான் பிரச்சாரதிற்கு செல்லும் இடமெல்லாம் விஜய பிரபாகருக்கு பிரச்சாரம் செய்யவில்லையா என கேட்பார்கள் அவர் என் பிள்ளை இல்ல அங்குள்ள லட்சக்கணக்கான தாய்குலத்தில் பிள்ளை அவர்கள் பார்த்து கொள்வார்கள் என சொன்னேன்
உங்களை நம்பி நானும் கேப்டனுக்கு விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டோம்
எல்லாம் மொழியும் அவருக்கு தெரியும், அமைதியாக இருக்கார் என நினைக்க வேண்டாம், அவர் பயங்கர “ஷார்ப்” அறிவாளி, நிச்சயமாக உங்களுக்காக உழைப்பார்
உங்களை நம்பி நானும் கேப்டனுக்கு விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டோம் சாத்தூரில் தன் மகனுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்….அவர் என் பிள்ளை இல்லை இனி அவர் உங்கள் பிள்ளை எனவும் பிரேமலதா பேசினார்