in

ஏழுமலையானுக்கு தலை முடி சமர்ப்பித்து உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டு வழிப்பட்டார்

ஏழுமலையானுக்கு தலை முடி சமர்ப்பித்து உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டு வழிப்பட்டார்

 

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்தில் உயிர் தப்பிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகனுக்காக அவரது மனைவி அன்னா லெஷ்னேவா ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து தலை முடி சமர்ப்பித்து உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டு வழிப்பட்டார்.

ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் கோடை விடுமுறை பயிற்சிக்காக சென்றார்.

அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் 15 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதில் பவன் கல்யாணின் மகனுக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பின்னர் இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு பவன் கல்யாண் சிங்கப்பூர் சென்று தனது மகன் மற்றும் மனைவி அன்னா லெஷ்னேவா ஐதராபாத்திற்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஷ்னேவா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார்.

தனது மகனுக்கு சிறு காயத்துடன் உயிர் பிழைத்ததால் ஏழுமலையானுக்கு மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார். முன்னதாக அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதால் ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தேவஸ்தான உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இன்று காலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றினார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயில் எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்து வழிப்பட்டார்.

What do you think?

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு சாக்லேட் அலங்காரத்துடன் தீபாராதனை

தஞ்சையில் தீத்தொண்டு வாரம் தீயணைப்பு துறையினரால் அனுசரிக்கப்பட்டது