நேட்டோ உச்சி மாநாட்டில் உளறிய அதிபர் ஜோ பிடன்
வாஷிங்டன் டி.சி.யில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய அதிபர் ஜோ பிடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்று அறிமுகப்படுத்தினார்.
பிறகு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினை விட “சிறந்தவர்” என்று கேலி செய்து, தன் தவறை மறைத்து சிரித்தார்.
– மற்ற உலகத் தலைவர்களும் தவறைப் புரிந்துகொண்டனர், ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் “நாக்கு சறுக்கல்கள் சில நேரங்களில் நடக்கும்” என்று கூறினார்.
ஜனாதிபதி பிடனின் வயது குறித்து சர்ச்சை கிளப்பிய சிலர் அவரை ஜனாதிபதி போட்டியில் இருந்து வெளியேறுமாறு கூறினர்