ஏ பி ஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டன
இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டன.
இந்தியாவின் முன்னாள் மறைந்த குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் நினைவு நாளினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அப்துல்கலாம் அற்க்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியான ஒன்பதாம் ஆண்டு அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு மர்ரக்காணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடவு செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பாக அதன்பொதுச்செயலாளர் கோகுல் ராஜ் தலைமையில் பள்ளி மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு மரம் வளர்ப்பதன் பயன்குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு வீடுகள் தோறும் மரம் வளர்க்க வலியுறுத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவு சார் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்செல்வி அப்துல்கலாம் அறக்கட்டளையின் செயலாளர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.