பைனான்ஸியரிடம் உதவி கேட்பது போல் நடித்து, பணம்- நகைகளை கொள்ளை
புதுச்சேரியில் பைனான்ஸியரிடம் உதவி கேட்பது போல் நடித்து, பணம்- நகைகளை கொள்ளையடித்து சென்ற ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த இருவரை முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதி,( 44) முதலியார்பேட்டை, நுாறடிச் சாலையில் வாடகை வீட்டில் தங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு, வீட்டின் அருகே காருடன் நின்றிருந்த 2 பேர், தாங்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு மதுரை செல்ல வேண்டும், முடியாததால் இரவு தங்குவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர்.
ஜோதி தன்னுடைய வீட்டில் தங்கி கொண்டு காலையில் செல்லுங்கள் என அழைத்து சென்றார். வீட்டின் மொட்டை மாடியில் படுத்தால் கொசு கடிக்கும் என கூறி தனது வீட்டின் ஹாலில் இருவரையும் படுக்க சொல்லிவிட்டு, ஜோதி தனது அறைக்கு சென்று படுத்தார். காலையில் எழுந்து பார்த்த போது, மேசையில் வைத்துவிட்டு சென்ற தனது 3 சவரன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் பணம், ஸ்மார்ட் வாட்ச், மொபைல்போன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
குறித்து முதலியார் பேட்டை போலீசார் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த சபரி, சந்திரசேகர் ஆகிய கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் மற்றும் பணத்தை கைபேசிகள் பறிமுதல் செய்தனர்.