தொண்டை அம்மை நோய் பரவல் 1முதல் 5 வகுப்பு வரை விடுமுறை அளிக்க அதிமுக அன்பழகன் வலியுறுத்தல்.
புதுச்சேரியில் பொண்ணுக்கு வீங்கி என்ற தொண்டை அம்மை வேகமாக பரவி வருகிறது. இந்த நோயானது சிறுவர்களுக்கு அதிக அளவில் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்றால் கூட படிக்கும் மாணவர்களுக்கும் பருவம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகம் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர் இதனால் புதுச்சேரியில் அதிக அளவில் நோய் பரவக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நோய் பரவலை தடுக்க ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை அளிக்க வேண்டும்.அப்படி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் துணைநிலை ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்…